முதுதமிழரின் உத்வேகம்

​“முதுதமிழரின் உத்வேகம்”
 (Inspiration in Tamil Seniors)
பொன் குலேந்திரன்
(முன்னைய பீல் முது  தமிழர் சங்கத் தலைவர்)

“உத்வேகம்” என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கும் தீவிரமாக செலாற்றும் வேகம். உற்சக்தியோடு தொடர்புள்ளது. என்ன தடைகள் வந்தாலும்  சாதித்து காட்ட  வேண்டும் என்ற வேகமும் மனத்  தைரியமும்   ஒரு மனிதனுக்குள் இருப்பது  தான் உத்வேகம். சாதனையாளர்களிடம் இருக்கும்  குணம் இது.
சோம்பலும், தன்நம்பிக்கை இல்லாமையும் எதிர்மறையான  சிந்தனையும் (Negative thinking)  உத்வேகத்திற்கு  எதிரானது.  . முதியோர், பேச்சு , செயல்.   எழுத்து. தமிழ் கலை திறன் மூலம், எனக்கு நேரம் இல்லை என்று சொல்லிபடி   வீட்டில் முடங்கிக் கிடைக்காமல்  தம் உத்வேகத்தை காட்டலாம். எப்போதும் மற்றவர் மேல்  குறை கண்டு கொண்டு இருப்பவர்கள்  எதிர்மறை போக்குள்ளவர்களின் குணம். செயலாற்றறும்  திறமை இல்லாத அவர்கள், மற்றவர்களை  செயல் புரியவும்   விடமாட்டாரர்கள். அவர்களுக்கு எதிர்த்து மனு (Petition)  எழுதுவது அவர்களின் பொழுது போக்கு  காரணம் தம்மையும் அவர்கள் மிஞ்விடுவார்களோ என்ற பயமும், எரிச்சலும் இவர்களுக்கு இச் செயல்கள் மூலம்  மன திருப்தியை   கொடுக்கிறது இவர்கள் சுய விளம்பரவாதிகள் . சுயநலவாதிகள்.
முதியவர்கள் தம்முள் உள்ள திறமையை  எப்படி வளர்க்கலாம்? .ஒரு முதியோர் சங்கத்தில் அங்கத்தினராக இருப்பின் அந்த சங்கத்தை  உங்கள் சொந்த வீடாக கருதவேண்டும். சாதி. மத, அந்தஸ்து, குலப் பெருமை . சுயனலத்துக்கு  இடமிருக்க கூடாது. கரை வலை இழுப்பதும், கோவில் தேர் இழுப்பது ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு.  சங்கம் நடத்தும் கருத்தரங்கு, நிகழ்சிகளில் உங்கள் வீட்டு வைபவம் எனக் கருதி பங்கு கொள்ளவேண்டும். அந்த நிகழ்ச்சயில் உங்கள் திறமையை  வெளிக்காட்டும்  சந்தர்ப்பம் உண்டு. . 
தமிழர் வரலாறு தோல்பொருள்  ஆராச்சி  தொடர்புள்ள  தொல்பொருள் ஆய்வாளர் (Archeologist) வேலைக்கான நேர்முக பரீட்சைக்கு ஒருவன் போயிருந்தான். நல்ல சம்பளமும் சலுகைகளும் அவ்வேலைக்கு நிறுவனம் கொடுக்கும்     அதனால் அப் பதவிக்கு பட்டம் பெற்றவர்கள்  பலர் பொட்டியிட்டனர் . வேலைக்கு  தெரிவு செய்யும் அந்த  நிறவனத்தின் மேல் அதிகாரிகள் குழு  தெரிவு செய்ய சில கோட்பாடுகளுக்குப் பொருந்தும் ஒருவரை மட்டுமே தேர்ந்து எடுக்க தீர்மானித்து இருந்தார்கள் .
நேர்முகப் பரீட்சை நடக்கும் அறையின்  வாசலின் ஓரத்தில் ஒரு கசங்கிய பேப்பர் துண்டினை  வைத்திருந்தார்கள்.  பரீட்சைக்கு சென்றவர்கள் கோட் சூட் அணிந்து, அவர்கள் அந்த  அறைக்குள் போனபோது  அந்த பேப்பர் துண்டினை கவனியாது சென்றனர். வேட்டி சால்வை அணிந்த ஒருவன் மட்டும் வித்தியசமான ஆடை அணிந்து  சென்றான். அறைக்குள் போகமுன் கதவைத தட்டி “ உள்ளே வரலாமா  ஐயா “: என்று கேட்டு அனுமதி பெற்றபின் அறைக்குள் நுழைந்தான். அறைக்குள்  உள்ளிடும் பொது கீழே கிடந்த பேப்பர் துண்டினை   எடுத்து தன் சட்டைப் பையுக்குள் வைத்துகே கொண்டான்.

அவர்கள் கதிரையில் இருக்க  சொல்லுமட்டும் அவன் இருக்கவில்லை. அவன் அணிந்திருந்த  ஆடையை பார்த்த அதிகாரிகள் அவனைப் பார்த்து இதென்ன  வேட்டி சாலவ்யோடு வந்திருக்குறீர்”? என்று ஒரு அதிகாரி கேட்டார்.
“ஆம் ஐயா நான் நேர்முகப் பரீட்சைக்கு வந்தது  தமிழ் வரலாறு ஆராச்சியாளர் வேலைக்கு . அகனால் அதற்கு பொருத்தமான் ஆடை அணிந்துவந்துள்ளேன்’“வாசலில் இருந்த பேபர் துண்டு எங்கே”?
“இதோ என் பையுக்குள். இவ்வளவு சுத்தமான அறைக்கு அது ஒரு வடு போல் இருந்தது அதுதான் எடுத்து என் சேர்ட் பையுக்குள் வைத்து விட்டேன் ”
அவனின் பதிலை கேட்து வாயில் விரல் வைத்தார்கள் .அதிகாரிகள் கேட்ட  கேள்விகள் எல்லா
வற்றிற்கும்  சரியான பதில்கள்  சொன்னான். அதிகாரிகள் அதர்ந்து போனார்கள்.
“சரி  தமிழ் வரலாறு பற்றி ஆராச்சி  செய்ய போகும் நீர் அவ் இனத்தை பற்றி சுருக்கமாக ஐந்து நிமிடங்களுக்குள் உமக்கு தெரிந்ததை  சொல்லும்” குழு தலைவர் சொன்னார்
“தற்போது சுமார்   தொண்ணூறு மில்லியன் தமிழ் பேசுபவர்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பது ஒரு கணிப்பு. எல்லா  மொழிகளிலும் தொன்மையான  தமிழ் இனம் பேசும் மொழி தமிழ். சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு  முன் இருந்த குமரிகண்டத்தில தமிழ் மொழி பேசிய இனம் தமிழ் மொழி. இதற்கான  ஆதாரங்கள் உண்டு. மேற்கத்திய தேசங்களினால்  தமிழ் இனத்தின் பெருமை மங்கி. உள்ளது. தமிழினத்தைப் பற்றி எழுதும் போது லுமேரியா (Lumeriya) என்ற குமரிக்கண்டமும் இன்றியமையாததாகிறது குமரிக்கண்டம் இன்று   முழுமையாக நிருபிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது,  காரணம் தமிழ் இனத்தின் வரலாறு.  மேற்கத்திய இனத்தின் வரலாற்றினை மிஞ்சி விடும் என்ற மேற்கத்திய நாடுகளின் பயமே . ஆனாலும் தொல்காப்பியத்தில் இதனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன எனத் தெரிகிறது..  மயன்கள்  என்பவர்கள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் இனத்தினர் மேலும் மத்திய அமெரிக்காவிலும் வாழ்ந்த குறிப்புகள் உள்ளன இலங்கையிலும் மயன்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளதாக தகவல் உள்ளன.  பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். அவ் எல்லைகள், தொலைமேற்கில் – கிரேக்க நாடு, மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா, தொலை கிழக்கில் – சீன நாடு, கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்,தெற்கில்நீண்டமலைத்தொடர். இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்”.
“அது சரி முதுயோரின் தனிமை பற்றி உமது கருத்து என்ன”? அதிகாரி ஒருவர் கேட்டார் 
“முதியோர்கள் தனிமையைத் தாமே உருவாக்கிக் கொள்கிறார்கள்  துணையை இழந்த ஒரு முதியவருக்கு ஊடல் செய்து, தம் பிர்சனைகளை பகிர்ந்து   வாழ ஒருவரும் இல்லை. பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பயன் பெற்றபின் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவாரகள். முதியோர் அனேகமாக முதியோர் இல்லத்தை   தஞ்சம் அடைகிறார்கள். கவலையைப் போக்க தியனம், யோகா,  எழுத்து, வாசிப்பு  போன்ற  செயல்கள் மூலம் மனக் கவலைகள் மறந்து , மனதை உத்வேகத்தொடு ஓய்வில்லாது வைத்திருக்க வேண்டும் . சிலர் தீராத  வியாதிக்கு உட்பட்டு கஷ்டப் படாமல் இருக்கு கருணைக்கொலையை நாடுகிறார்கள். இறைவன் படைத்த எமது  உயரை நாமே  எடுக்க எமக்கு  உரிமை இல்லை. அதோடு தற்கொலை செய்தவர்களின் மறு பிறவி நல்லதாக ஒருக்காது என இந்து வேதம்  சொல்கிறது”.வந்தவர்.சொன்னார “நாங்கள் உமது உமது அறிவையும்   உத்வேகத்தை பார்த்து உம்மை பாராட்டுகிறோம்   உம்மை இந்த வேலைக்கு நியமித்து விட்டோம். நாளை  உமக்கு நியமனக் கடிதம் வரும்” என்றார் குழுத தலைவர்
“:நன்றி ஐயா”

Scroll to Top